Skip to content

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் 108 ஓதுவார் மூர்த்திகள் பங்கேற்பு..

கலாச்சார அமைச்சகம் இந்திய அரசின் கீழ் செயல்படும் தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம் சார்பில் இளைஞர்கள் மத்தியில் பழம்பெரும் கலையான தேவாரம் மற்றும் திருமுறையை ஊக்குவிக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு சிவ ஸ்தலங்களில் தேவாரத் திருமுறை சேர்ந்திசை பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் தேவாரத் திருமுறை சேர்ந்திசை பெருவிழா நடைபெறுகிறது.

இதில் 108 ஓதுவார் மூர்த்திகள், பக்க இசை கலைஞர்கள் மற்றும் 150 பள்ளி மாணவ மாணவிகள்

கலந்துகொண்டு தேவாரம் திருமுறை பாடினர்.

விழாவில் தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மைய இயக்குனர் கோபாலகிருஷ்ணன், நிர்வாக அலுவலர் சீனிவாசன், நிகழ்ச்சி அலுவலர் ராஜா உள்ளிட்ட தென்ன பண்பாட்டு மைய அலுவலர்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

கடந்த 6 மாதங்களாக கரந்தை தமிழ்ச் சங்கத்தில் பள்ளி மாணவர்களுக்கு தேவாரம் திருமுறை பயிற்சி வகுப்பினை தென்னக பண்பாட்டு மையம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *