Skip to content

திருச்சி அருகே வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்த தொழிலாளி

  • by Authour

திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த தொட்டியம் , கொசவம்பட்டி மேற்கு தெருவை சேர்ந்த பண்ணைக்காரன் மகன் அங்கமுத்து (33), சென்ட்ரிங் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது தோட்டத்திற்கு செல்வதாக கூறி சென்றவர் இரவு கொசவம்பட்டி மாரியம்மன் கோவில் பகுதி அருகே முள்காட்டில் தலையில் பலத்த வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். அந்தவழியாக தோட்டத்திற்கு சென்று விட்டு வந்த அங்கமுத்துவின் அக்கா கீதா தனது தம்பி அங்கமுத்து இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டு கத்தியதில் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்துள்ளனர், பின்னர் இது குறித்து தொட்டியம் காவல் நிலையத்துக்கு கொடுத்த தகவலின் பேரில், தொட்டியம் காவல் ஆய்வாளர் முத்தையன், காவல் உதவி ஆய்வாளர் குமரேசன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று கை, வாய், பின்புற கழுத்து, முதுகு ஆகிய பகுதியில் வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்த அங்கமுத்துவின் சடலத்தை கைப்பற்றி முசிறி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து அங்கமுத்துவை வெட்டி கொலை செய்த நபர்கள் யார் எதற்காக கொலை செய்தனர் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த அங்கமுத்துவிற்கு திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தகவலறிந்த முசிறி டிஎஸ்பி யாஸ்மின் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கதிரேசன் (முசிறி) பொன்ராஜ் (தா. பேட்டை) ஆகியோர் சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *