கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் பகுதியை சேர்ந்தவர் கிருபா(27). இவர் லாலாபேட்டை பகுதியில் தங்கிருந்து கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே மாயனூர் மின்வாரியத்தில் கேங்மேனாக பணியாற்றிய வருகிறார். இன்று மாலையில் லாலாப்பேட்டை அடுத்த பாலப்பட்டி பகுதியில், மத்திப்பட்டியை சேர்ந்த நாகராஜ் என்பவரின் தோட்டத்திற்கு மின்சாரம் கொடுப்பதற்காக மின்கம்பத்தில் பணியில் ஈடுப்பட்டு இருந்தார். அப்போது மின்சாரம் பாய்ந்து கிருபா தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரது உடல் மீட்கப்பட்டு பிரேத சோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பபட்டது. இது குறித்து லாலாப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.