மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரிய இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இதேபோல் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உட்பட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதாவது, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கரூர், திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.