கோவை மாவட்டம், வால்பாறை செப்டம்பர் 16 ஸ்டாண்மோர் எஸ்டேட் குரூப் ஆபிஸ் பகுதியில் ஓம்னி வேணும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் வந்தவர் கால் முறிவு ஏற்பட்டுள்ளது. ஸ்டாண்மோர் பகுதியில் இருந்து வால்பாறை நோக்கி TN: 41:AJ 4591 ஓமினி கார் ஓட்டி வந்த டிரைவர் சுரேஷ்குமார் (39) ஓட்டி வந்துள்ளார். ஸ்டாண்ட்மார் குரூப் ஆபிஸ் வளைவில் வந்தபோது மதுரையிலிருந்து இன்பச் சுற்றுலாவிற்கு வந்த இளைஞர்களில் வினோத்( 23) டூவிலரில் தன் நண்பருடன் வந்தபோது வளைவில்
எதிர்பாராத விதமாக ஓம்னி கார் மீது மோதி கால் முறிவு ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் 108 வாகனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் வினோத்குமாரை வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து திவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் பரிசோதித்த மருத்துவர் கால் முறிவு ஏற்பட்டுள்ளது. என தெரிவித்தார். இந்த விபத்தில் சிறு காயங்கள் அவரது நண்பரும் omni ஓட்டுனரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்தை அறிந்த வால்பாறை காவல்துறை சிகிச்சை பெற்று வரும் வினோத்குமாரை விசாரித்து வருகின்றனர். இதனால் காயமடைந்தவரை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.