தஞ்சை மாவட்டம், பாபநாசம் தெற்கு ஒன்றியச் செயலர் நாசர் தலைமை வகித்தார்.
ராஜ்ய சபா எம்.பி யும், தஞ்சாவூர் வடக்கு மாவட்டச் செயலருமான கல்யாணந்தரம் மருத்துவ உபகரணங்களை, சக்கராப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் மோனிஷா விடம் வழங்கினார். திமுக மாநில மருத்துவ அணி துணைச் செயலரும், தஞ்சை மாநகராட்சி துணை மேயருமான டாக்டர் அஞ்சுகம் பூபதி முன்னிலை வகித்தார். இதில் தஞ்சை வடக்கு மாவட்ட திமுக மருத்துவரணி துணைத் தலைவர் நவநீத கிருஷ்ணன், மாவட்ட துணைச் செயலர் அய்யாராசு, பாபநாசம் வடக்கு ஒன்றிய செயலர் தாமரைச்செல்வன், பாபநாசம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சுமதி, பாபநாசம் பேரூராட்சி மன்றத் தலைவர் பூங்குழலி, பாபநாசம் பேரூர் செயலர் கபிலன், அய்யம்பேட்டை பேரூர் செயலர் துளசி அய்யா, திமுக அயலக அணி மாநில துணைச் செயலர் விஜயன், தஞ்சை வடக்கு மாவட்ட சிறு பான்மையினர் நல உரிமைப் பிரிவு
அமைப்பாளர் பாவை அனிபா, தஞ்சை வடக்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் முபாரக் ஹீசைன், பாபநாசம் அரசு வழக்கறிஞர் வெற்றிச்செல்வன், தஞ்சை வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மணிகண்டன், சக்கராப்பள்ளி ஆரம்பச் சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர் நாடிமுத்து உட்பட பலர் பங்கேற்றனர்.