Skip to content
Home » வெளிநாட்டில் பைக் ரைட் செய்யும் அஜித்… வீடியோ…

வெளிநாட்டில் பைக் ரைட் செய்யும் அஜித்… வீடியோ…

  • by Authour

நடிகர் அஜித்க தற்போது இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாக உள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார்.

இந்த திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தும் இன்னும் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருப்பதால் விடாமுயற்சி படப்பிடிப்பு எப்போதுதான் தொடங்கும் என்றும், படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது குறித்து எந்த தகவலும் அறிவிக்கப்படவில்லை. இதனால் ரசிகர்கள் அனைவரும் மிகவும் சோகத்துடன்

இருக்கிறார்கள். இதற்கிடையில், அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவது வழக்கம். அவர் ஏர்போர்ட் செல்லும் புகைப்படம், மனைவியுடன் வெளிநாட்டில் ஊர் சுற்றும் புகைப்படம், பைக் ரைட் செல்லும் புகைப்படம் என இவ்வாறு ரசிகர்களை ஒரு பக்கம் ஆறுதல் செய்து வருகிறது.

இந்த நிலையில், தற்போது அரபு நாடான ஓமனில் இருக்கும் அஜித் பைக் ஓட்டும் போது, ரசிகர் ஒருவர் அஜித்தை பார்த்ததும், “Ok Thala Sir..See You..Take Care.. Happy Journey” என்று அஜித்குமாருடன் கேஷுவலாக உரையாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *