தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே மெலட்டூரில் ஶ்ரீ சித்தி புத்தி சமேத அருள்மிகு தட்சிணாமூர்த்தி விநாயகர் கோயில் உள்ளது. இது ஸ்ரீ ஞான புராணத்தில், ஸ்ரீ கற்க மகரிஷியால் வர்ணிக்கப் பட்டிருக்கின்ற 108 கணபதி ஸ்தலங்களுள், 81 வது ஸ்தலமாகும். இக் கோவில் 3 பிரகாரங்களைக் கொண்டது. மூல ஸ்தானத்தை சுற்றி வரும் பிரகாரம், த்வஜ ஸ்தம்பத்தை சுற்றி வரும் பிரகாரம், கோவிலுக்கு வெளியில் அமைந்துள்ள பிரகாரம். ஸ்ரீ சண்டிகேஸ்வரர், ஸ்ரீ பைரவருக்கு தனி மண்டபம் உள்ளது. தவிர அலங்கார மண்டபம், வசந்த மண்டபம், யாக சாலை, மடப் பள்ளி உள்ளது. வீதியுலாவிற்கென ஶ்ரீ நர்த்தன கணபதி, சண்டிகேஸ்வரர் அழகுற காட்சியளிக்கின்றனர். வருடந் தோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 10 நாட்கள் பிரம்மோத்சவம் நடைப் பெறும். இந்த நாட்களில் ஸ்ரீ சித்தி, புத்தி சமேத அருள்மிகு தட்சிணாமூர்த்தி விநாயகர் புறப்பாடு பல வித
வாகனங்களில், காலை, மாலை நடைப் பெற்றது. 5 ம் நாளன்று ஓலைச் சப்பரத்தில் வீதியுலா நடைப் பெற்றது. 9 ம் நாளன்று மகாரதத்தில் வடம் பிடிக்க, புறப்பாடு நடைப்பெறுகிறது. 7 ம் நாளான நேற்று காலை ஸ்ரீ தட்சிணா மூர்த்தி விநாயகருக்கு அம்பாள் ஸ்ரீ சித்தி, புத்தியுடன் திருக்கல்யாணம் நடைப் பெற்றது. இதில் பிற மாநிலங்கள், தமிழகத்தின் இதர பகுதிகளிலிருந்து பங்கேற்றனர். இதில் திருமணம் ஆகாதவர்கள், திருமணம் கால தாமதம் ஆகும் ஆண்கள், பெண்கள் வந்து விநாயகரை தரிசித்து, பிரார்த்தனை, அபிஷேகம் செய்து, மலர் மாலை, மஞ்சள் கயிறு அணிந்துக் கொண்டனர், அப்படி அணிந்து கொண்டால் திருமண ம் நிகழும் என்பது ஐதிகம். செப் 8 ம் தேதி தொடங்கி 18 ம் தேதி வரை பிரம்மோத்சவம் நடைப் பெறுகிறது. இதற்கான ஏற்பாட்டினை கலைமாமணி குமார் தலைமையில் செய்திருந்தனர்.