திருச்சி மாவட்டம், லால்குடியில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ. 8 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்டும் கட்டுமான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் லால்குடி எம்எல்ஏ சௌந்தரபாண்டியன் அரசு மருத்துவ மனை வளாகத்தில் ரூ.8 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய
கட்டிடத்தின் மேற்கூறை அமைக்கும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வுப்பணியின் போது நகர்மன்றத் தலைவர் துரைமாணிக்கம் , மருத்துவ அலுவலர் செழியன், பொதுப்பணித்துறை தலைமை செயற்பொறியாளர் வள்ளுவன், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கணேசன், அசோக்குமார் ,ஒப்பந்ததாரர் கிருஷ்ணகுமார் , மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.