Skip to content

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000…. இன்றே வந்தது…. பெண்கள் மகிழ்ச்சி, பாராட்டு

  • by Authour

மகளிர் உரிமைத்தொகை   வழங்கும் திட்டம் நாளை தொடங்கி வைக்கப்படுகிறது.  இதனை நாளை காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த  திட்டத்தில்  பணம் அனுப்பினால் அது வாடிக்கையாளர்களுக்கு சரியாக போய் சேருகிறதா என முதலில் சோதனை செய்து பார்த்தனர். பணம் சரியாக போய் சேர்ந்ததால் இன்று  பெரும்பாலானவர்களுக்கு பணம் அனுப்பும் பணி தொடங்கியது.

அதன்படி திருச்சி மாவட்டத்தில் பரவலாக இன்று பலருக்கு ரூ.1000  வங்கி கணக்கில் வரவு ஆகி உள்ளது. இதுபற்றி உடனடியாக அவர்களது செல்போன் எண்ணுக்கு தவலும் வந்து உள்ளது. 15ம் தேதி தருவோம் என்று  சொன்ன முதல்வர்  ஸ்டாலின் 14ம் தேதியே  பணம் அனுப்பி விட்டார் என மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.  பலர் முதல்வர் ஸ்டாலினை பாராட்டி வாழ்த்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!