திருச்சி மாவட்டம் லால்குடி ரவுண்டானாவில்
மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கை மதவாதம் விலைசி உயர்வு உள்ளிட்டவர்களை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் லால்குடி நகர செயலாளர் குணா தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது மத்திய அரசை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கண்டன உரையாற்றினார்கள்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் பசுபதி, பன்னீர், மாதவன், பழனி, முருகன், நவீன், சாந்தி, வசந்தா, கனிமொழி, ரதி, சரண்யா, ஈஸ்வரன், பூண்டியார், அலெக்ஸ், மூர்த்தி, பரமேஸ்வரன், சுப்பிரமணியன், சங்கர், பாலகிருஷ்ணன், ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.