மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கான தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியதை தொடர்ந்து, திட்டமிட்டபடி வரும் 15-ம் தேதி படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர்கள் விஷால், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டப் பலர் நடிப்பில் வரும் செப்.15ம் தேதி ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், படத்தை வெளியிட தடை விதித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாதது தொடர்பாக நடிகர் விஷால், சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். தனை ஏற்ற நீதிபதி, மார்க் ஆண்டனி படத்தின் தயாரிப்பில் விஷாலுக்கு தொடர்பு இல்லை என்பதால் படத்தை வெளியிட அனுமதி அளித்து உத்தரவிட்டார். மேலும், கடந்த 2021ம் ஆண்டு
முதல் இது வரை விஷாலின் நான்கு வங்கிக் கணக்குகளின் கணக்கு விவரங்களையும், விஷாலுக்கு சொந்தமான அசையும், அசையா சொத்து விவரங்களையும், ஆவணங்களுடன் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, மார்க் ஆண்டனி திரைப்படம் திட்டமிட்டபடி வரும் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.