அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் அறிவியல் கணித ஆர்வத்தை தூண்டும் வகையில் நடமாடும் அறிவியல் மற்றும் கணித ஆய்வகங்கள் மாதந்தோறும் உரிய வழிகாட்டுதலுடன் மாணவர்கள் கற்பிக்கப்படுவதுடன் மாணவர்களை உருவாக்கி அறிவியல் கருவிகளும் காட்சிப்படுத்தப்படும். குழந்தைகளிடையே இயல்பாகவே உள்ள படைப்பாற்றல் ஆர்வத்தினை வளர்த்தெடுத்து அறிவியல் கற்பதன் மூலமாக கிடைக்கும் ஆர்வத்தினை தக்க வைத்தல் இந்த ஆர்வத்தின் மூலம் புதுமைகளை காணும் மன பாங்கினை வளர்த்தெடுத்தல் தான் பெற்ற அறிவினை தமக்காண மொழியில் பகிர்ந்து அறிவியல் முறை பழகுதல் அன்றாட வாழ்க்கையில் உள்ள அறிவுகளை உணர்ந்த சமூகவியல் இலக்கியத்துடன் ஆன அறிவியலை புரிந்து கொள்ளுதல் ஆகியவை வானவில் மன்றத்தின் நோக்கங்கள் ஆகும்.
அந்த அடிப்படையில் இன்று திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள இ.ஆர். மேல்நிலைப் பள்ளியில் வானவில் மன்றம் சார்பாக மாணவர்களுக்கு அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிவசுப்பிரமணியன் வரவேற்புரை ஆற்றினார். மேலும் இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் முனைவர்
ராமகிருஷ்ணன் தலைமையேற்றார். அறிவியலின் வளர்ச்சி பற்றிய தொலைநோக்கு பார்வையுடன் மாணவர்கள் செயல்பட வேண்டும் அவற்றின் முக்கியத்துவத்தை குறித்து ஆசிரியர்கள் மாணவர்கள் மத்தியில் சிறப்புரை ஆற்றினார்கள்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் ஆயிரம் விதை பந்துகள் தயாரித்த ஆசிரியர்களுக்கும், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலராக பொறுப்பேற்ற முதுகலை ஆசிரியர் விஜயகுமாருக்கும், சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் ஏவ பங்களிப்பு வழங்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக விஞ்ஞான வளர்ச்சி அதன் முக்கியத்துவம் வருங்காலத்தில் அறிவியலில் பயன்பாடு குறித்து விளக்கும் வகையில் விஞ்ஞான பயணத்தில் நம் கற்றல் என்னும் தலைப்பில் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி வினாடி வினா போட்டி நடைபெற்றது இதில் சிறப்பாக பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.