மத்திய அரசு இளைஞர்களுக்கு தொழில் கடன் வழங்க சலுகை தராமல், கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகள் வழங்குவதாகவும், பெட்ரோல், டீசல், எண்ணெய், பருப்பு இவற்றின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த தவறியதாகவும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைப்பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை சட்டமாக்க மறுப்பதாகவும் குற்றம்சாட்டி சிபிஐ கட்சியினர் தஞ்சை தலைமை தபால் நிலைய அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். முன்னதாக ரயில் நிலையத்தில் இருந்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியவாறு பேரணியாக வந்தனர். மறியலில் ஈடுப்பட்ட பெண்கள் உள்பட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.