அமைச்சர் உதயநிதியை கண்டித்து திருச்சி திருவானைக்காவல் இந்து சமய அறநிலைத்துறை அலுவலகம் அருகே பாஜகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஹெச்.ராஜா உள்ளிட்ட 70 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்கள் மீது சட்டவிரோதமாக கூடுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் திருவரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.