பெரம்பலூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், ஒன்றிய பாஜக அரசை கண்டித்து பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஜெயராமன் தலைமையில் பெரம்பலூர் மாவட்ட வருமானவரித்துறை அலுவலகம் முன்பு
சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், இந்தி திணிப்பு, சுயநலனுக்காக கலவரத்தை தூண்டி நாட்டை நாசம் செய்யும் பாஜகவே ஆட்சியை விட்டு வெளியேறு என முழக்கம் எழுப்பி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
