மணல் மாபியா புதுக்கோட்டை எஸ்.ஆர். ராமச்சந்திரன் தற்போது கொள்ளிடம் ஆற்றில் மணல் எடுக்க குத்தகை எடுத்து உள்ளார். அங்கு விதிகளை மீறி மணல் எடுப்பதாக புகார்கள் வந்தது. இதைத்தொடர்ந்து இன்று புதுக்கோட்டையில் உள்ள மணல்மாபியா ராமச்சந்திரனின் வீடு, அலுவலகம் ஆகிய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று காலை 6 மணி அளவில்
திருச்சி திருவானைக்காவல் அடுத்த கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். மத்திய போலீஸ் பாதுகாப்புடன் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.
கொள்ளிடம் ஆற்றில் குத்தகைக்கு எடுக்கப்பட்ட ஏரியாவை தாண்டி மணல் எடுக்கப்படுகிறதா, ஒவ்வொரு லாரியிலும் எவ்வளவு மணல் அள்ளப்படுகிறது. கோர்ட் கூறியுள்ள நெறிமுறைகள் படி மணல் எடுக்கப்படுகிறதா, அதை மீறி பல அடி ஆழத்திற்கு மணல் எடுக்கப்படுகிறதா என அதிகாரிகள் கொள்ளிடம் ஆற்றில் ஆய்வு மேற்கொண்டனர். இதனால் இந்த குவாரியில் இருந்து இன்று மணல் லாரிகள் செல்லவில்லை. அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மணல் மாபியா ராமச்சந்திரனை குறிவைத்து தமிழகம் முழுவதும் இன்று ரெய்டு நடக்கிறது.