திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூர் ஊராட்சியில் உள்ள
எஸ்ஆர்எம், டிஆர்பி பொறியியல் கல்லூரியில் பொறியியல் முதலாண்டு மாணவர்களுக்கான துவக்க விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் பேசுகையில் உங்களுக்கென்று ஒரு பாதையை நீங்கள் உருவாக்காமல் விட்டால் இந்த உலகம் எங்கே போய்
நிறுத்தி விடும். இந்த சமூகத்திற்காக நீங்கள் திருப்பிக் கொடுக்கப் போகும் ஒன்றே ஒன்று கல்விதான் அதை யார் கூறினாலும் கல்வி கற்பதை விட்டு விடாதீர்கள்.
திருச்சி மற்றும் ராமபுரம் வளாகத்தின் தலைவர் டாக்டர் ஆர். சிவக்குமார், துணைத் தலைவர் நிரஞ்சன் ஆகியோர்களின் வழிகாட்டுதல்படி, விழா நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் டாக்டர். கணேஷ் பாபு விழாவிற்கான வரவேற்புரை வழங்கினார். திருச்சி மற்றும் ராமபுரம் எஸ்ஆர்எம் குழுமத்தின் முதன்மை இயக்குனர் சேதுராமன் தலைமைதாங்கி சிறப்புரையாற்றினார். திருச்சி எஸ்ஆர்எம் குழுமத்தின் இயக்குனர் மால்முருகன் வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினர்களாக கூகுள் நிறுவன மென்பொருள் பொறியாளர் ஆர்ச்சி ரத்தி பேசுகையில் பொறியியல் துறையில் மாணவர்கள் எவ்வாறு புதிய தொழில் நுட்பங்களை உருவாக்க வேண்டும் என்றும் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி குறித்தும், புதிய தொழில் நுட்பங்களை பொறியியல் துறையில் எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்றும் உரையாற்றினார்.
நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் தன்னம்பிக்கை பேச்சாளர் கோபிநாத் சிறப்புரையில் உங்களுக்கென்று ஒரு பாதையை நீங்கள் உருவாக்காமல் விட்டால் இந்த உலகம் எங்கே போய் நிறுத்தி விடும். இந்த சமூகத்திற்காக நீங்கள் திருப்பிக் கொடுக்கப் போகும் ஒன்றே ஒன்று கல்விதான் அதை யார் கூறினாலும் கல்வி கற்பதை விட்டு விடாதீர்கள்.மேலும் மாணவர்களின் எதிர்கால திட்டமிடல் குறித்த தேவையை மாணவர்களுக்கு உணர்த்தினார். விடாமுயற்சி, உழைப்பு, அர்ப்பணிப்பு குறித்தும், பொறுப்புகளை மாணவர்கள் தவிர்காமல் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். எஸ்ஆர்எம் வளாகத்தின் மாணவர் சேர்க்கை இயக்குனர் திரு கதிரவன் அவர்கள் நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர்.