கோவை மாவட்டம், வால்பாறை அடுத்த டாடா டீ க்கு சொந்தமான பண்ணி மேடு பங்களா டிவிசன் பகுதியில் ஜார்கண்ட் மாநிலத்தைச் நிரந்தர தொழிலாளி ஜஹர்நாத் மகன் ஜெகதேவுராண் வயது 29 மனைவி பெயர் கத்தம் தேவி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.இன்று மதியம் 14ம் நம்பர் காட்டில் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவருடைய உறவுக்காரர்களுக்கு உடல்நிலை சரியில்லை என விடுப்பு பெற்றுக் கொண்டு வரும் வழியில் கால்வாயில் கை கால்களை சுத்தம் செய்வதற்காக அருகில் உள்ள கால்வாயில் இறங்கியுள்ளார். அப்போது கால் வழுக்கி விழுந்ததால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். வீட்டுக்குச் சென்றவரை காணும் என அப்பகுதியில் உள்ள தொழிலாளர்கள் தேடிப் பார்த்தபோது அங்குள்ள கால்வாயில் மூழ்கி உயிரிழந்ததை அறிந்த தொழிலாளர்கள் ஷேக்கல்முடி காவல் துறைக்கு தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் பிரேதத்தை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு கொண்டு வந்தனர். இதனால் வால்பாறை காவல்துறையினர் கொலையா? தற்கொலையா? என தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் உள்ள தொழிலாளர்கள் இடையே ஆழ்ந்த சோகத்தில் உள்ளனர்.