விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரை சமூக வலத்தில் இழிவாக பேசிய பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் புகார் மனு…
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் அவர்கள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இந்து அறநிலையத்துறை சேகர்பாபு அனைவரையும் சமூக வலைதளத்தில் இழிவாக பேசி வரும் பாரத ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் மற்றும் அவரது மனைவியை கைது செய்யக்கோரி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் இன்று புகார் மனு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட கழகச் செயலாளர் ரத்தினவேல் தலைமையில் கொடுக்கப்பட்டது.
மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியரும் காவல் கண்காணிப்பாளரும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர் நடவடிக்கை எடுக்க தாமதாகும் பட்சத்தில் பாஜக தலைவர் அவரது மனைவி மீது நீதிமன்றத்தில் முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வில்
பெரம்பலூர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இரா.ஸ்டாலின், மண்டல து.செ லெனின் , மண்டல து.செ , மன்னர் மன்னன், நாடாளுமன்ற து.செ மு.உதயக்குமார் மாவட்ட செய்தி தொடர்பாளர், ஒன்றிய செயலாளர்கள் வெற்றியழகன், இடி முழக்கம், மனோகரன், இரா.பிச்சைபிள்ளை, பாஸ்கர், நந்தன், இளமாறன், சண்முகசுந்தரம் நகர செயலாளர், கதிரவன், பிச்சைப்பிள்ளை, கரு .அய்யம் பெருமாள், வேலுச்சாமி, குணச்சேகரன், அம்பேத் கோகுல், சந்திரகுமார், ரகுராமன், குமரன், சக்திவேல் உட்பட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பலர் உடன் இருந்தனர்