இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சூப்பர்4 சுற்று ஆட்டம் இன்று (ரிசர்வ் டே) நடைபெற உள்ளது. விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் களத்தில் உள்ளனர். இன்று மாலை 3 மணிக்கு ஆட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், வேகப்பந்து வீச்சாளரும், வர்ணனையாளருமான வாசிம் அக்ரம் நேற்று டி.வி. நிகழ்ச்சியில் பேசும் போது, ‘ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் நேற்று ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக விராட்கோலியை கடந்து சென்ற போது நான் அவரிடம், ‘இப்போதெல்லாம் என்னுடைய கனவில் நீங்கள் வருகிறீர்கள்’ என்று சொன்னேன். அதற்கு கோலி, ‘என்ன சொல்கிறீர்கள்’ என்று கேட்டார். உங்களை டி.வியில் அதிகமாக பார்ப்பதால் நீங்கள் கனவில் வந்திருக்கலாம் என்று அப்போது சொன்னேன். கோலியை அடிக்கடி டி.வியில் பார்ப்பதால் அவரை எனது மனதில் இருந்து அகற்ற முடியவில்லை’ என்றார்.