தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே திருப்பாலைத்துறை பகுதியில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்போது அப்பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து பாபநாசம் போலீசார் திருப்பாலைத்துறை குடமுருட்டி ஆற்றின் கரை ஓரத்தில் ரோந்து பணி மேற்கொண்டபோது 2 பைக்கில் 4 பேர் வந்துள்ளனர். அவர்களை நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள், அய்யம்பேட்டை பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (25), கட்டை என்கின்ற கதிர்வேல் (22), ஜம்புகேஸ்வரர் (22), விருதாச்சலத்தை சேர்ந்த முகமது சல்மான் (19) ஆகிய 4 பேர் என்பது தெரிய வந்தது.
பின்னர் அவர்கள் வந்த பைக்குகளை போலீசார் சோதனை செய்தனர். இதில் 200 கிராம் கஞ்சா வைத்திருந்ததும், அவர்கள் கஞ்சா விற்றதும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.