திருச்சியில் காவேரி மருத்துவமனை மற்றும் தன்னார்வ அமைப்புகள் ஒன்றிணைந்து மூன்று பிரிவுகளாக மெகா மாறத்தான் ஓட்டம் இன்று நடைபெற்றது. 21 கிலோமீட்டர் மாரத்தான் ஓட்டம் சமயபுரம் கூத்துர் அருகில் இருந்து தொடங்கியது.
இதனை திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண்குமார் தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து 10 கிமீ மாரத்தான் ஓட்டத்தை திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி கொடியசைத்து தொடங்கி வைத்தார், இந்த மாரத்தான் ஓட்டமானது தென்னூர் அண்ணா நகரில் இருந்து தொடங்கி மாவட்ட ஆட்சியர்
அலுவலக சாலை, மன்னார்புரம் வழியாக அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நிறைவடைகிறது.
அதேபோன்று ஐந்து கிலோ மீட்டர் மாரத்தான் ஓட்டமானது தென்னூர் அண்ணா நகரில் இருந்து தொடங்கி அண்ணா விளையாட்டு அரங்க மைதானத்தில் நிறைவு பெறுகிறது. 5 கிமீ மாரத்தான் தொடர் ஓட்டத்தினை அமைச்சர் கே என் நேரு தொடங்கி வைத்தார்.
நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சிய பிரதீப் குமார் பங்கேற்று பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவிக்க உள்ளார்.