நாகப்பட்டினத்தில் போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்த ரமேஷ் என்பவர் சில மாதங்களுக்கு முன்பு உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார் அவரின் குடும்பத்தினருக்கு மறைந்த ரமேஷ் உடன் 1993 ஆண்டில் ஒன்றாக பணியில் சேர்ந்த தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 3,200 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ஒன்றிணைந்து காக்கும் கரங்கள் 1993 காவல் நண்பர்கள் என்ற வாட்ஸ் அப் குழு மூலம் ரமேஷின் குடும்பத்தினருக்கு உதவிடும் வகையில் சக காவலர்கள் தங்களால் முடிந்த பண உதவியை வழங்கினர் அதனை நாகப்பட்டினத்தில் உள்ள காவலர்
குடியிருப்பில் வசிக்கும் மனைவி அமுதா அவரது மகன் விஜய் ஆகியோரிடம் சக காவலர்கள் கொடுத்த 7 லட்சத்து 4500 ரூபாய்கான காசோலையை வழங்கினர் தங்களுடன் பணிபுரிந்த சக காவலருக்கு சக காவலர்கள் ஒன்றிணைந்து பணம் சேகரித்து வழங்கிய சம்பவம் பொதுமக்கள் மற்றும் காவலர்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.