சென்னை நியூ பெருங்களத்தூர் தங்கராஜ் நகரை சேர்ந்த ஜானகிராமன் என்பவரின் மனைவி ராதிகா (51 ). இவர் தனது குடும்பத்துடன் சென்னையில் இருந்து சுவாமிமலையில் உள்ள தனது குலதெய்வ கோவிலுக்கு செல்ல வேண்டி கடந்த 06.09.2023 அதிகாலை 03.20 மணிக்கு கும்பகோணம் வரை இரயிலில் பயணம் செய்து வரும் போது ரயில் திருப்பாதிரிபுலியூர் இரயில் நிலைய நடைமேடையில் வந்து கிராஸ் செய்துள்ளார். அப்போது திடீரென ஒரு மர்ம நபர் வந்த ராதிகாவின் கழுத்தில் இருந்த தாலி செயினை பறித்து கொண்டு ஓடிவிட்டார். இதை கண்ட ராதிகா அலறி சத்தம் போட்டுள்ளார். இதனையடுத்து கடலூர் இருப்பாதை போலீஸ் ஸ்டேசனில் ராதிகா புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். மேலும் திருப்பாதிரிபுலியூர் இரயில்நிலையத்தில் சிசிடிவி கேமரா இல்லாததால் 10 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்தனர்.
இந்தநிலையில் சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் அந்த செயின் பறித்த மர்ம நபரின் அடையாளம் கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று அதிகாலை 6 மணியளவில் கடலூர் இருப்புப்பாதை ரயில் நிலையத்தின் சிதம்பரம் செல்லும் இரயில் தண்டவாளப்பாதை அருகில் நகை பறித்த நபர்களான 1) கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர் தானம் நகரை சேர்ந்த சுதாகர் (21), 2.கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர் வெள்ளிமோட்டான் தெருவை சேர்ந்த கார்த்திகேயன் (எ) மணிகண்டன் (20) என 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 2 1/2 பவுன் தாலிச்செயினை பறிமுதல் செய்தனர். மேலும் குற்றவாளிகள் 2 பேரையும்
கடலூர் கோர்ட்டில் ஆஜர் செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேற்படி வழிபறி சம்பவத்தில் ஈடுப்பட்ட உண்மை குற்றவாளிகளை 24 மணி நேத்தில் கண்டறிந்து கைது செய்து கொள்ளை அடித்த பொருட்களை மீட்டதற்கு தாலியை பறி கொடுத்த ராதிகா மற்றும் அவரது குடும்பத்தினர் இருப்புப்பாதை காவல் துறை இருப்புப்பாதை பாதுகாப்பு படை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு மனமாற பாராட்டு தெரிவித்தனர்.