திருச்சி மாநகராட்சி 5 வது மண்டலம், 27வது வாடு மூலை கொல்லை தெரு மாநகராட்சி உருது பள்ளி ரூபாய் 66 லட்சம் மதிப்பீட்டில் 23 ஆயிரம் சதுர அடியில் மூன்று வகுப்பறைகள், ஒரு தலைமை ஆசிரியர் அரை, நூலகம் மற்றும் ஸ்மார்ட் கிளாஸ், சமையல்அறை மற்றும் கழிவறைகள் கூடிய பள்ளி கட்டிடம் அமைய உள்ளது. பள்ளி கட்டுமான பணிகளை மேயர் மு. அன்பழகன் ஆய்வு மேற்கொண்டார் இந்த ஆய்வின்போது உதவி ஆணையர் சதீஷ்குமார், உதவி செயற்பொறியாளர் ராஜேஷ் கண்ணா,இளநிலை பொறியாளர் பிரசாத் மாநகராட்சி
அலுவலர்கள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து 25வது வார்டு ஆர்சி பள்ளியில் கலைஞர் நூற்றாண்டு விழா முன்னிட்டு திருச்சி இயன் முறை மருத்துவர்கள் பெருமன்றம் சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது முகமை மேயர் மு. அன்பழகன் பார்வையிட்டார்கள். அருகில் மாமள்ள உறுப்பினர் நாகராஜன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.