தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை @TNDIPRNEWS என்ற பெயரில் ட்விட்டரை வைத்துள்ளது. இதில் தமிழக அரசின் செய்திக் குறிப்புகள், முதல்வரின் அறிவிப்புகள் உள்ளிட்டவைகள் தொடர்பான தகவல்கள் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டுவருகிறது.
இந்நிலையில் தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறையின் ட்விட்டர் பக்கத்தை சமூக விரோதிகள் இன்று ஹேக் செய்தனர். இந்த @TNDIPRNEWS ட்விட்டர் பக்கத்தில் புத்தாண்டு வாழ்த்துகள், எலான் மஸ்க், கிரிப்டோ தொடர்பான தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.