ஆங்கில புத்தாண்டு 2023 நேற்று நள்ளிரவு 12 மணிக்கு பிறந்தது. கரூர் ஜவகர் பஜார், வெங்கமேடு, தான்தோன்றிமலை, காந்திகிராமம், ராயனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இளைஞர்கள் பட்டாசு வெடித்து புத்தாண்டு வரவேற்றனர். கரூரில் உள்ள அன்னை தெரசா அம்மாள் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
கரூர் மாநகர காவல்துறை சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மாநகர் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எஸ்பி சுந்தரவதனம் பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருடன் கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்று, கொண்டாடினார். பின்னர் காவலர்களுக்கு கேக் ஊட்டி,இந்த ஆண்டு சிறப்பாக அமையட்டும் என்று ஒவ்வொருவருக்கும் வாழ்த்து கூறினார்.