நாகை மாவட்டம் நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் அதிமுக திமுக வினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக சுமார் இருதரப்பை சேர்ந்த 30 பேர் மீது நாகூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் அதிமுக பிரமுகர்கள் எதிர்த்தரப்பை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் ரகளையில் ஈடுபடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதிமுகவை சேர்ந்த ஜெகநாதன், கலைவாணி, ஆகியோர் அரிவாள் கொண்டு ரகளையில் ஈடுபடும் காட்சி வெளியாகி உள்ளதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.