தமிழகத்தில் மொத்தம் 45 ஐபிஎஸ் அதிகாரிகள் இன்று அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி சென்னை பயிற்சி கல்லூரியில் ஐஜியாக இருந்த அருண் பதவி உயர்வு பெற்று, குடிமைப்பொருள் வழங்கல் ஏடிஜிபியாகவும், லஞ்ச ஒழிப்புதுறை ஐஜி கல்பனா நாயக், பதவி உயர்வு பெற்று பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாகவும், உள்பாதுகாப்பு ஐஜி ஈஸ்வரமூர்த்தி, போலீஸ் அகாடமி ஏடிஜிபியாகவும், தற்போது மத்திய அரசு பணியில் உள்ள அவி பிரகாஷ், இதே பணியில் ஏடிஜிபியாகவும், மத்திய அரசு பணியில் உள்ள ஐஜி(சிபிஐ) வித்யா குல்கர்னி, அதே பணியில் ஏடிஜிபியாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு ஐஜி வன்னிய பெருமாள், மின்வாரிய லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஜிபியாகவும் பதவி உயர்வு பெற்று செல்கின்றனர்.
அதேபோல், சேலம் டிஐஜி பிரவீன்குமார் அபினாப்பு, திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனராகவும், சென்னை சட்டம் ஒழுங்கு டிஐஜி நரேந்திரன் நாயர், மதுரை மாநகர கமிஷனராகவும், திண்டுக்கல் டிஐஜி ரூபேஷ்குமார் மீனா, அமலாக்கப்பிரிவு ஐஜியாகவும், காஞ்சிபுரம் டிஐஜி சத்திய பிரியா, பதவி உயர்வு பெற்று திருச்சி மாநகர கமிஷனராகவும், மத்திய அரசு பணி (சிபிஐ) டிஐஜி விஜயேந்திர பண்டாரி பதவி உயர்வு பெற்று அதே துறையில் ஐஜியாகவும் செல்கின்றனர்.
மேலும் நெல்லை கமிஷனர் அவினாஷ் குமார், சென்னை நிர்வாகத்துறை ஐஜி, சென்னை நிர்வாகத்துறை ஐஜி தமிழ் சந்திரன், சென்னை பயிற்சி கல்லூரி ஐஜி, திருச்சி மத்திய மண்டல ஐஜி சந்தோஷ்குமார், சென்னை நவீன மயமாக்கல் ஐஜி, திருச்சி மாநகர கமிஷனர் கார்த்திகேயன், மத்திய மண்டல ஐஜியாக மாறுதலாகி செல்கின்றனர். இவர்கள் உள்பட மொத்தம் 45 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக உள்துறை செயலாளர் பனீந்திர ரெட்டி பிறப்பித்துள்ளார்.