வாழ்க்கையில் மாற்றுத்திறனாளிகளாக பிறப்பது ஜீன்கள் கோளாறு, உணவு முறைகள் என சொல்லப்படுகிறது. அதே போல விபத்துகளில் கை, கால்களை இழப்பது பலரது சூழ்நிலையால் ஏற்படுகிறது. இப்படி நிகழ்ந்த ஒருவர் தான் நேற்றைய தினம் கோவை ராமநாதபுரம் பகுதியில் மாற்றுத்திறனாளிகளின் மூன்று சக்கர சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அந்த சைக்கிள் பின்னாடி அவரது குழந்தை தள்ளிச் செல்லும் காட்சி கண்கலங்க
வைத்தது. தாய் தந்தையரை நாம் வயதான காலத்தில் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என பெரியவர்கள் அறிவுரை வழங்குவார்கள் ஒரு சிலர் தாய் தந்தையரை அனாதையாக்கி சொத்தை அபகரித்து அவர்களை வெளியே தள்ளும் நிலையும் ஏற்பட்டு வருகிறது. ஆனால் அதற்கு மாறாக ஒரு சிறுமி அவரது தந்தையை உட்கார வைத்து மூன்று சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லும் காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.