சன் டிவியில் ஔிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதிகுணசேகரன் வேடத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர் மாரிமுத்து(57). இவர் இன்று டப்பிங் பணியின் போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். தமிழில் வாலி, உதயா, ஜெயிலர், பரியேறும் பெருமாள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் மாரிமுத்து . இவர் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர். சீமான், மணிரத்னம், எஸ்.ஜே சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். பின்னர் புலிவால், கண்ணும், கண்ணும் என இரு திரைப்படங்களை இவரே இயக்கினார். அதன்பிறகே சினிமாவில் நடிக்கத்தொடங்கினார். ஆனாலும் டிவி சீரியல் மூலம் இவர் பிரபலமடைந்தார். இவருக்கு
மனைவியும், மகன், மகள் உள்ளனர். இவரது இறுதிச்சடங்கு சொந்த ஊரில் நடக்க இருக்கிறது. இதற்காக மாரிமுத்து உடல் தேனி மாவட்டம் வருசநாடு கொண்டு செல்லப்படுகிறது.
டிவி சீரியலில் ஆணாதிக்கம் கொண்டவராக நடித்து பிரபலமானார். அந்த சீரியலே இவரைக்கொண்டே நகரும் வகையில் கதை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த எதிர்நீச்சல் சீரியல் மூலமே தான் பிரபலம் ஆனதாக மாரிமுத்து ஒரு பேட்டியில் கூறி இருந்தார். மூடநம்பிக்கை எதிர்ப்பாளர். அதே நேரத்தில் பெண்களுக்கு மிகுந்த மரியாதை அளிப்பவர்.