பிறந்துள்ள 2023 ஆங்கில புத்தாண்டு அனைவரின் வாழ்விலும் நன்மை, மகிழ்ச்சியை கொண்டு வர வேண்டும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது. புத்தாண்டு என்றாலே அனைவரின் நினைவுக்கும் வருவது கமல் பைக்கில் அமர்ந்து, விஷ் யூ ஹாப்பி நியூ இயர் சொல்லிக்கொண்டே பாடி வரும் பாடல்.
இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், கமல் போல் ஆடை அணிந்து, தான் பைக்கில் அமர்ந்துள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதை வரவேற்றும், அதே சமயம் கிண்டலடித்தும் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.