பெரம்பலுார் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கல்விக்கடனுதவி முகாம் இன்று (07.09.2023) மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பெரம்பலுார் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன், மாவட்ட ஊரட்சிக்குழுத்தலைவர் சி.இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகிக்தனர்.
இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இம்முகாமில் 105 மாணவ மாணவிகள் பங்கேற்று கல்விக்கடனுதவி கேட்டு விண்ணப்பித்தனர். இம்முகாமில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி, பாரதஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் பரோடா உள்ளிட் அனைத்து பொதுத்துறை வங்கிகளும், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, எச்.டி.எப்.சி வங்கி, தமிழ்நாடு கிராம வங்கி உள்ளிட்ட அனைத்து தனியார் துறை வங்கிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் மாணவ, மணாவிகளுக்கான வங்கிக்கடனுதவி முகாம் இன்று நடத்தப்பட்டுள்ளது. இன்றைய முகாமில் 105 மாணவ, மாணவிகள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். அவர்களில் 9 நபர்களுக்கு நிகழ்விடத்திலேயே ரூ.52.40 லட்சம் மதிப்பிலான கடனுதவிக்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மாணவ, மாணவிகளிடத்திலும் வங்கிக்கடனுதவி முகாம் குறித்த தகவல்களை இன்னும் முறையாக கொண்டுசேர்த்து, அக்டாபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இரண்டாவது வாரங்களில் இன்னும் இரண்டு கல்விக்கடன் முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இன்று கலந்துகொண்ட மாணவ மாணவிகள் பெற்றோர்கள் உங்கள் வீட்டின் அருகில் உள்ள, உங்கள் ஊரில் உள்ள மாணவ, மாணவிகளிடமும் கல்விக்கடன் முகாம் குறித்து எடுத்துரைத்து அவர்களையும் இம்முாகமில் பங்கெடுத்து பயன்பெறச் செய்திட வேண்டும். மாவட்ட நிர்வாகத்தின் சார்பாகவும் இம்முகாம்கள் தொடர்பாக பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் விளம்பரப்படுத்தப்படும்.
இன்று வரப்பெற்றுள்ள அனைத்து விண்ணப்பங்களும் முறையாக சம்மந்தப்பட்ட வங்கியாளர்கள் மூலமாக பரிசீலிக்கப்பட்டு தகுதி வாய்ந்த அனைவருக்கும் கல்விக் கடனுதவி கிடைப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
பின்னர் 9 மாணவ மாணவிகளுக்கு ரூ.52.40 லட்சம் மதிப்பிலான கடனுதவித்தொகைக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் பெரம்பலுார் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஊாட்சிக்குழுத்தலைவர் ஆகியோர் வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பாஸ்கர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு பரத்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.