Skip to content

தஞ்சையில் வேலை செய்த வீட்டில் தங்க நகை திருடிய இளம்பெண் கைது…

தஞ்சை கரந்தையை சேர்ந்தவர் குலோத்துங்கன் (65). ஓய்வு பெற்ற டிராபிக் வார்டன். கடந்த 5ம் தேதியன்றி இவரது வீட்டில் இருந்த 3 பவுன் தங்க நகைகள் காணாமல் போய்விட்டது. நகைகளை பல இடங்களில் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இது குறித்து குலோத்துங்கள் தஞ்சை மேற்கு போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் சப் -இன்ஸ்பெக்டர் ராஜ்கமல் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார் . இதில் குலோத்துங்கனின் வீட்டில் வேலை பார்க்கும் கரந்தை பூக்குளம் இரட்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த மாரியப்பன் மனைவி சித்ரா (37) என்பவர் நகைகளை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார், சித்ராவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!