தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை சுந்தரம் நகரைச் சேர்ந்தவர் அப்துல் காதர். இவரது மனைவி ஜெரினா பேகம் (36). இவர் நேற்று காலை ரெட்டிபாளையம் சாலையிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் தனது மகள் சபிகா (14) , மகன் முகமது சைபு (4) ஆகியோரை விடுவதற்காக ஸ்கூட்டியில் அழைத்து சென்று கொண்டிருந்தார்.
பள்ளி அருகே சென்றபோது அந்த வழியாக வந்த மணல் லாரி ஸ்கூட்டி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜெரினாபேகம் குழந்தைகள் கண்முன்பே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மேலும் இந்த விபத்தில் குழந்தைகள் சபிகா, முகமது சைபு ஆகியோர் படுகாயமடைந்தனர். மேலும் குழந்தை முகமது சைபு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாயும் , மகனும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் , சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. படுகாயமடைந்த குழந்தை சபிகா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.