கரூர் பண்டரிநாதன் தெருவில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பண்டரிநாதன் , ரகுமாய் தாயார் ஆலயத்தில் கோகுல அஷ்டமியை முன்னிட்டு மூலவர் சுவாமிகளுக்கும், பரிவார சுவாமிகளுக்கும் எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து மூலவர்
பண்டரிநாதன், ரகுமாரி தாயார் உள்ளிட்ட சுவாமிகளுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் பண்டரிநாதன் ஆலயத்தில் நடைபெற்ற கோகுலாஷ்டமி சிறப்பு அபிஷேகத்தை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலய வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.