அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் உள்ளார். தற்போது அவர் இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார். இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் எம்.பி.ஜெயவர்த்தன்( ஜெயக்குமாரின் மகன்),வழக்கறிஞர் எம்.எல்.ரவி, ராமச்சந்திரன், ஆகியோர் வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.
எந்த தகுதியின் அடிப்படையில் இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார் என விளக்கம் கேட்க உத்தரவிடக்க கோரி இந்த வழக்கு தொடரப்பட்டது.இந்த மனுக்கள் மீதான வாதங்கள் நிறைவடைந்த நிலையில், கடந்த மாதம் 4ம் தேதி, தீர்ப்பானது தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கில், தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிசேவலு அமர்வு நேற்று தீர்ப்பளித்தது. அதில், இது குறித்து முதல்வர் தான் முடிவு செய்யவேண்டும் என தீர்ப்பளித்து வழக்கை முடித்து வைத்தது.
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் நாளை சென்னை செசன்ஸ் நீதிமன்றத்தில் அமைச்சர் செநதில் பாலாஜி சார்பில், ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட உள்ளது. உச்சநீதிமன்ற வழக்கறிஞர் என். ஆர். இளங்கோ ஜாமீன் மனுவை தாக்கல் செய்கிறார்.