திருச்சி மாவட்டம், முசிறியை அடுத்த தொட்டியம் அருகே உள்ள கவுத்தரசநல்லூர் பகுதியில் மழைகாலங்களில் மழை நீர் கல்பாலம் வழியாக அருகில் உள்ள 200 மீட்டர் தொலைவில் உள்ள பாசன வாய்க்காலில் மழைநீர் சென்றடைய ஏதுவாக சாக்கடை கட்டப்பட்டுள்ளது .
இந்த சாக்கடை முழுவதும் தூர்வாரப்படாமல் பாலம் முழுவதும் மண் நிறம்பி உள்ளது. அதனால் ஒவ்வொரு மழைகாலங்களில் வெள்ள நீர் , மழைநீர் கல்பாலம் மூலம் செல்ல வழி இல்லாமல் அருகில் உள்ள குடிசை வீட்டுக்குள் மழை வரும் போதெல்லாம் மழை நீர் வீட்டுக்குள் புகுந்து , அவர் அருவடை செய்து வீட்டிற்குள் வைத்து இருக்கும் நெல், மற்றும் தானியங்கள் சேதம் அடைந்து வருகிறது இதனால் இந்த பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இவர்கள் நீண்ட காலமாக இதே மாதிரி வேதனையை தொடர்ந்து அனுபவித்து வருகிறார். இதற்க்கு நிரந்தர தீர்வு இதுவரை யாரும் எடுக்கவில்லை என தெரிவிக்கின்றனர்.