Skip to content
Home » குண்டும் குழியுமாய் காட்சியளிக்கும் அரியமங்கலம் சுரங்கப்பாதை சாலை…

குண்டும் குழியுமாய் காட்சியளிக்கும் அரியமங்கலம் சுரங்கப்பாதை சாலை…

  • by Authour

திருச்சி மாவட்டம், திருவரம்பூரை அடுத்த அரியமங்கலத்தில் பள்ளிகள், தொழிற்சாலைகள், திருமண மண்டபங்கள், அரிசி ஆலைகள் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனங்கள், குடோன்கள் ஆகியவை உள்ளதால் இங்குள்ள சாலைகள் எந்நேரமும் வானங்கள் வந்து செல்லும் வண்ணமாக உள்ளது.
இதற்காக அரியமங்கலம் ரயில்வே மேம்பாலம் கீழ் அமைந்துள்ள அணுகு சாலையில் வாகனங்கள் செல்வதற்காக சுரங்கப்பாதை உள்ளது. இதன் வழியாக நாளொன்றுக்கு டூவீலர்கள், சரக்கு வேன்கள் பள்ளி வாகனங்கள், பேருந்துகள், கனரக வாகனங்கள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக சுரங்கப் பாதையில் மழை நீர் நிரம்பி வெளியேறுவதற்கு வழியில்லாமல் தேங்கி நின்றது. இதனால் அவ்வழியே செல்லக்கூடிய வாகனங்களின் போக்குவரத்தால் சுரங்கப்பாதையில் உள்ள சாலையானது குண்டும் குழியுமாக மாறி மிகப்பெரிய பள்ளம்

ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வழியே வரக்கூடிய வாகனங்கள் பள்ளத்தில் இறங்கி ஏறும் போது வாகன ஓட்டிகள் விபத்தை சந்தித்து வருகின்றனர். மேலும் தங்களது வாகனங்களை பள்ளத்தில் விடாமல் செல்வதற்காக சாலையில் இடது மற்றும் வலது புறமாக வாகனங்கள் ஒட்டி செல்வதால் போக்குவரத்து நெரிசலும் அவ்வப்போது ஏற்படுகின்றன.

இந்தப் பள்ளத்தினை சீரமைத்து தரமான தார் சாலை அமைத்து தரக் கோரி நெடுஞ்சாலைத்துறை நிர்வாகத்திடம் புகார் அளித்தால் இது எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் கொடுங்கள் என்றும், மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் கொடுத்தால் தேசிய நெடுஞ்சாலை துறை நிர்வாகத்திடம் புகார் கொடுங்கள் என்று அவரவர் தங்கள் பொறுப்பை தட்டிக் கழிப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இந்நிலையில் அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளாமல் இருப்பதால் தொடர்ந்து மழை பெய்யும் போதெல்லாம் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி நிற்பதுடன், சாலைகள் மேலும் சேதமடைந்து வாகன ஓட்டிகள் விபத்தை சந்தித்து வருகின்றனர். மேலும் வாகனங்களின் சேஷ், மற்றும் பட்டைகள் உடைவதாக வாகன ஓட்டிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
கடந்த ஓராண்டுகளுக்கு மேலாக இதே நிலை நீடித்து வருவதால், துறை சார்ந்த அதிகாரிகள் தங்களது பொறுப்பை தட்டிக் கழிக்காமல் உரிய நடவடிக்கை எடுத்து தரமான தார் சாலை அமைத்து தர வேண்டும், அதே போல் சுரங்கபாதையில் மழை நீர் வடிந்து செல்வதற்கான வடிகால் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *