Skip to content

திருச்சி அருகே சட்ட விரோதமாக அரசு மதுபான பாட்டில்கள் விற்ற 2 இளைஞர்கள் கைது….

  • by Authour

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே நங்கமங்கலம் சத்திரம் பகுதியில் சட்ட விரோதமாக அரசு மதுபான பாட்டில்கள் விற்பனை செய்வதாக மண்ணச்சநல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது அங்கு 2 பேர் சட்ட விரோதமாக அரசு மதுபான பாடல்களை விற்பனை செய்தது தெரியவந்தது. அவர்களை பிடித்து விசாரணை செய்ததில்
மண்ணச்சநல்லூர் காந்தி நகரை சேர்ந்த 23 வயதான மாரிமுத்து மற்றும் நங்கமங்கலம் சத்திரம், மேல தெருவை சேர்ந்த 22 வயதான சதீஷ்குமார் இருவரும் நங்கமங்கலம் சத்திரம் பகுதியில் உள்ள வாய்க்கால் கரையில் சட்ட விரோதமாக அரசு மதுபான பாட்டில்களை விற்பனை செய்தது தெரிய வந்தது. பின்னர் இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்த மண்ணச்சநல்லூர் போலீசார் அவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் திருச்சி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2 ல் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து 15 குவட்டர் பட்டில்களகள், மற்றும் இரண்டு மோட்டார் பைக்குகள் பணம் ரூ. 1400 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *