அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று கோவை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பிரச்னைகளை திசை திருப்ப அமைச்சர் உதயநிதி சனாதனம் பற்றி பேசுகிறார். தாழ்த்தப்பட்டவர்களை எதிர்த்தவர்கள் தான் திமுக. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. திமுக சனாதனத்தை பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது. அதிமுக மதத்திற்கும், சாதிக்கும் அப்பாற்பட்ட கட்சி. இதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். சனாதனத்தை உதயநிதி பேசுபொருளாக்கி விட்டார். விலைவாசி உயர்வை மறைக்க இந்த பிரச்னையை கையில் எடுத்து உள்ளனர்.
இந்தியாவை பாரதம் என மாற்றி ஜனாதிபதி மாளிகையில் இருந்து அழைப்பிதழ் வந்துள்ளதே கேட்டபோது, இதை நான் பார்க்கவில்லை. நான் பார்த்து விட்டு அது உண்மையா, பொய்யா என தெரிந்து கொண்டு பேசுகிறேன்’ என்றார்.
மீண்டும் இந்தியா வின் பெயர் பாரதம் எ ன மாற்றம் செய்யப்போகிறார்களே என கேட்டபோது வேறு கேள்வி கேளுங்கள், அதையே திருப்பி திருப்பி கேட்கிறீர்களே என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
ஒரே தேர்தல் என்பதை கண்டு முதல்வர் ஸ்டாலின் ஏன் பயப்படுகிறார். நான் தான் சிறந்த முதலமைச்சர் என்கிறாரே பிறகு ஏன் பயப்படுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.