திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள ரெங்கநாதபுரம்பகுதியில் இருந்து பெருமாள் பாளையம் வழியாக ஒட்டம்பட்டி செல்லும் சாலை சுமார் மூன்று கிலோ மீட்டர் நீளம் அமைந்துள்ள சாலையை மேம்படுத்த பாரத பிரதமர் மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ஒரு கோடியை 81 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு தார் சாலை அமைக்கும் பணி நடைப்பெற்றது இந்த தார் சாலை அமைக்கும் பொழுது முறையான சாலைகள் அமைக்கும் விதிமுறைகளை பின்பற்றாமல் மண் மீது தாரை ஊற்றி அவசரம் அவசரமாக சாலை அமைத்தது சென்றதாக பொதுமக்கள் குற்றம் சாற்றி வருகின்றனர்.
எந்த நிதியாண்டில் நிதி ஓதுக்கப்பட்டது என்ற அறிவிப்பும் குறிபிட பட வில்லை 3கி.மீ தொலைவு சாலையை ஒரே நாளில் போடப்பட்டதாக சமுக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஆகஸ்ட் 2023ல் சாலை
அமைக்கப்பட்டதாக தெரிகிறது. சாலை அமைத்து ஒரு மாத காலத்திற்குள்ளாகவே சாலைகள் அடைபோல் எடுத்து கொண்டு வருவதாகவும் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கின்றது. இந்த பாதையை பயன்படுத்தி ஒட்டம்பட்டி, புதூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பெருமாள் பாளையம் செல்கின்றனர் இவர்கள் மிகவும் சிரமத்தோடு பள்ளிக்கூடம் செல்வதாக தெரிவிக்கின்றனர். பொதுமக்கள் கூறுகையில் மக்களின் வரிப்பணத்தில் தரமற்ற சாலை அமைத்து அதில் பணத்தை வீணாக்குவதற்கு பதிலாக தார் சாலை அமைக்காமலேயே இருந்திருக்கலாம் என்று ஆதங்கப்படுகின்றனர்.