Skip to content
Home » மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை எப்போது? நிதியமைச்சர் பேட்டி

மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை எப்போது? நிதியமைச்சர் பேட்டி

குடும்பத் தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்கிற தி.மு.க-வின் வாக்குறுதி சட்டமன்றத் தேர்தலின்போது பெண் வாக்காளர்களைப் பெரிதாகக் கவர்ந்தது. தி.மு.க வெற்றிபெற்றவுடன், ரூ.1,000 உரிமைத்தொகையை தமிழக அரசு வழங்கும் என்று குடும்பத் தலைவிகள் எதிர்பார்த்தனர். ஆனால், இதுவரை அது வழங்கப்படவில்லை. எதிர்க் கட்சித்தலைவர்கள்  இந்த விவகாரத்தில் தொடர்ந்து கேள்வி  எழுப்பிவருகின்றனர். இந்த் நிலையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மகளிருக்கு உரிமை தொகை தரும் திட்டம் தொடர்பான கணக்கெடுப்பு பணி 85 சதவீதம் நிறைவடைந்துள்ளது.2023 பட்ஜெட்டில் மகளிர் உரிமை தொகை திட்டத்தை அறிவிப்பது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *