நாகப்பட்டினம் மாவட்டம், பொரவச்சேரியில் பழமைவாய்ந்த முத்து மாரியம்மன் கோவில் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் குடமுழுக்கு நிகழ்ச்சியை முன்னிட்டு கடந்த-1ம் தேதி அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை ,கணபதி நவக்கிரஹ ஹோமம், , பூர்ணாஹூதி நடைபெற்றது. சிக்கல் பால் குளத்தில் இருந்து யானை மீது வைத்து புனித நீர் எடுத்து வந்து யாகசாலையில் வைத்து பூஜைகள் நடைபெற்றன. யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து மங்கள வாத்தியங்கள் முழங்க கடம்
புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து கடங்களில் கொண்டு வரப்பட்ட புனித நீர் கலசங்களில் ஊற்றப்பட்டு முத்து மாரியம்மன் கோவில் குடமுழுக்கு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. .அதனை தொடர்ந்து பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கு நிகழ்ச்சி நடைபெற்றது.அம்மனுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் பொரவச்சேரி, சிக்கல் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.