நாடு முழுவதும் வருகின்ற 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா இந்து எழுச்சி திருவிழாவாக இந்து முன்னணி சார்பாக கொண்டாடப்படுகிறது. கரூர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் கரூர் ஜவகர் பஜார் பகுதியில் அமைந்துள்ள தனியார் அரங்கில் இதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விநாயகர் சதுர்த்தியில் எங்கு சிலை வைப்பது, எவ்வாறு காவல்துறையில் அனுமதி பெறுவது, ஊர்வலம் நடத்துவது எப்படி உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் குறித்து
விவாதிக்கப்பட்டது. மேலும், கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 35க்கும் மேற்பட்ட இடங்களிலும், மாவட்டம் முழுவதும் சுமார் 200 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக முடிவு செய்யப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி வருகின்ற 17-ஆம் தேதி சிலை அமைத்தல், 18-ஆம் தேதி வழிபாடு நடத்துதல், 19-ஆம் தேதி விசர்ஜன ஊர்வலம் நடத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.