Skip to content

நாகை மீன்பிடி துறைமுகத்தில் குவிந்த மீன் பிரியர்கள்…

நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாஙகுப்பம், நம்பியார் நகர், விழுந்தமாவடி, காமேஸ்வரம் புஷ்பவனம்,கோடியக்கரை, உள்ளிட்ட 27 மீனவ கிராமங்களில் 500 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருகின்றனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நாகை துறைமுகத்தில் நூற்றுக்கணக்கான விசை படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீன்வர்கள் இன்று அதிகாலை 3 மணிக்கு கரை திரும்பினர். மீன்களை வாங்குவதற்கு மீன்பிரியர்கள், மீன் வியாபாரிகள் அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கானோர் நாகை துறைமுகத்தில் திரண்டனர். ஒரு சில விசை படகுகளில் அதிக அளவில் கனவா மீன்களும் ஏற்றுமதிக்காக

இறால் நண்டுகள் என கடந்த வாரத்தை விட இந்த வாரம் மீன்களின் வரத்து அதிகமாக இருந்தாலும் கூட, ஆவணி மாதங்களில் கோவில் திருவிழாக்கள்

என்பதாலும், மேலும் ஆவணி ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் ஏராளமான பெண்கள் விரதம் இருப்பார்கள் என்பதாலும் விற்பனை மந்தமாக இருப்பதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.வஞ்சரம் 1 கிலோ ரூ 550-600
வௌவால் 1 கிலோ ரூ1000-1050
பாறை 1 கிலோ ரூ 350-400
சீலா 1 கிலோ ரூ300-350
விள மீன் 1 கிலோ ரூ 250-300
சங்கரா 1 கிலோ ரூ 200-250
நெத்திலி 1 கிலோ ரூ 100-120க்கு விற்பனையானது. கடந்த வாரத்தை ஒப்பிடும்போது இந்த வாரம் விலை சற்று குறைந்துள்ளதால் மீன் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மேலும் தற்பொழுது வேளாங்கண்ணி ஆண்டு திருவிழா நடைபெற்று வருவதால் அங்கு வந்துள்ள பக்தர்களும், மீன் வாங்க அக்கரைப்பேட்டையில் உள்ள மீன் பிடித்து துறைமுகத்திற்கு வந்துள்ளதால் மீன்பிடி துறைமுகம் மக்கள் கூட்டத்தால் கலைகட்டி உள்ளது.கேரளாவில் தடைக்காலம் முடிந்ததால் உள்ளூர் வியாபாரிகளே தற்பொழுது அதிக அளவில் கூடியுள்ளனர்.வழக்கமாக 6.30 மணிக்கு எல்லாம் ஞாயிற்றுக்கிழமை ஏலம் முடியும் நிலையில் இன்று 8.30 வரை நீடிக்கும் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு முறையும் கடலுக்கு செல்லும்போது மீனவர்கள் 4 லட்சம் முதல் 5 லட்ச ரூபாய் வரை செலவு செய்து கடலுக்கு மீன் பிடிக்க செல்வதாகவும் ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு மீன்கள் விற்பனை இல்லை எனவும் கவலை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!