நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் என்னும் தூய்மை பணியில் கரூர் மாநகராட்சி மற்றும் தனியார் மகளிர் கல்லூரி, தனியார் நிறுவனம் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து நடத்தும் பிளாஸ்டிக் ஒழிப்பு மாபெரும் தூய்மை பணி முகாம் இன்று நடைபெற்றது. கரூர் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், தலைமையில் நடைபெற்ற தூய்மை பணியில் பெரியகுளத்துப்பாளையம் பகுதியில் தனியார் நிறுன ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து தேங்கியுள்ள பிளாஸ்டிக்
கழிவுகளை கொக்கி போன்ற அமைப்பு கொண்ட இரும்பு கம்பிகள் கொண்டு எடுத்து அகற்றினர். இதேபோல், காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே பிளாஸ்டிக் குப்பைகளை கல்லுரி மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் அகற்றினர்.
இதேபோல் மாநகராட்சியில் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் என 250-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.