நாகை மாவட்ட திமுக சார்பு அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நாகையில் நடைபெற்றது. தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் ஆலோசனைக் கூட்டத்தில், கலைஞர் நூற்றாண்டு விழா குறித்த நெறிமுறை கையோட்டினை திமுக சார்பு அணி நிர்வாகிகளுக்கு அமைச்சர் ரகுபதி வழங்கினார். அப்போது கூட்டத்தில் பேசிய சட்டத்துறை
அமைச்சர் ரகுபதி, தமிழகத்தில் நாங்களும் மாநாடு நடத்துகிறோம் என்று மார்தட்டிக் கொள்கின்றனர். அவர்களுக்கு எப்படிப்பட்ட மாநாடு நடத்த வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக திமுக நடத்தும் சேலம் மாநாடு அமையும் என்றார். மேலும் திமுகவின் சேலம் மாநாடு என்பது, புளியோதரை, தயிர்சாத மாநாடாக இருக்காது என்றும், அதிமுக, வின் மதுரை மாநாட்டில் சாதம் மிஞ்சி வீணானது குறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்தார்.