இந்தியா கூட்டணியின் 3வது கூட்டம் கடந்த 2 நாட்களாக மும்பையில் நடந்து வருகிறது. இன்று மதியம் இந்தியா கூட்டணிக்கு 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் இடம் பெற்றுள்ளார். குழுவில் உள்ள மற்ற உறுப்பினர்கள் விவரம்:
இந்திய கம்யூ பொதுச்செயலாளர் டி ராஜா, கே.சி. வேணுகோபால்( காங்), சரத்பவார், பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி, தேஜஸ்வி யாதவ்( பீகார் துணை முதல்வர்), ராகவ் சத்தா, ஹேமந்த் சோரன்,
கூட்டணியை அடுத்த கட்டத்திற்கு எவ்வாறு முன்னெடுத்து செல்வது என்பது குறித்து இந்த குழு நடவடிக்கை மேற்கொள்ளும். கூட்டணிக்கு ஒருங்கிணைப்பாளர் தேவையில்லை. இந்த ஒருங்கிணைப்பு குழுவே போதுமானது என முடிவு செய்யப்பட்டது.
இந்தியா கூட்டணியின் லோகோ இன்று மாலை வெளியிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலை இந்தியா கூட்டணி ஒருங்கிணைந்து எதிர்கொள்வது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தொகுதி பங்கீடு குறித்து விரைவில் முடிவு செய்வது என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அனைத்து மாநிலங்களிலும் தோ்தல் பிரசாரங்களை விரைவில் தொடங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.